Thursday, March 16, 2017

ரஜினி பாடலுடன் போட்டி போடும் சிம்பு-விஜய் ஆண்டனி பாடல்கள்


Nominations for Best Lyricist in IIFA Utsavamவிஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்….’ என்ற பாடல் பலரது மனதை கவர்ந்த பாடல் ஆகும்.


இப்பாடலை பிரபல பாடலாசிரியர் ஏக்நாத் எழுதியிருந்தார்.

இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்பாடலுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலுடன் மற்ற பாடல்களும் போட்டியிடுகிறது.

ரஜினி நடித்த கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா நெருங்குடா… என்ற பாடலும் உள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருந்தார்

மற்ற பாடல்கள் விவரம்…

  • இது கதையா… (பார்த்தி பாஸ்கர் – சென்னை 28 II)

  • தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா),

  • நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) – கவிஞர் தாமரை.

ஏக்நாத் எழுதியுள்ள மற்ற பாடல்கள் விவரம்…

  • நீயும் நானும்… (மைனா)

  • கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே… (உத்தமபுத்திரன்)

  • குக்குறுகுக்குறு… (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)

  • யாரோ யாரோ… (மீகாமன்)

  • தேகம் தாக்கும்… (புறம்போக்கு)

போன்றவை இவரது படைப்பில் வெளியான பாடல்களுக்கான சில உதாரணங்கள்.

Nominations for Best Lyricist in IIFA Utsavam

0 comments:

Post a Comment