Wednesday, March 1, 2017

பிளாஷ்பேக்: காந்திக்கு தங்க தட்டில் விருந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள்


பிளாஷ்பேக்: காந்திக்கு தங்க தட்டில் விருந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள்



01 மார்,2017 - 12:04 IST






எழுத்தின் அளவு:








கே.பி.சுந்தராம்பாள் அந்தக் காலத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை. கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர் இறந்ததும் 25 வயதில் விதவை கோலம் பூண்டது அனைவருக்கும் தெரியும். அவர் சிறந்த தேசப்பற்றாளர், ந்தியவாதி. தேசப்பற்று மிக்க பாடல்கள் பலவற்றை பாடியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளனார். பல தலைவர்களை சந்தித்துள்ளார்.

1937ம் ஆண்டு காந்தி ஈரோடு பகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கரூர் அருகே உள்ள கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் தனது வீட்டில் காந்திக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். காந்தியும் அதை ஏற்றுக் கொண்டு சுந்தராம்பாள் வீட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தீரர் சத்யமூர்த்தியுடன் சென்றார். சுந்தராம்பாள் காந்திக்கு பிடித்த சைவ சமையல் வகைகளை தானே செய்து, தங்க தட்டில் வைத்து பரிமாறினார். சாப்பிட்டு முடித்த காந்தி "எனக்கு சாப்பாடு மட்டும்தானா தங்க தட்டு கிடையாதா?" என்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கே.பி.சுந்தராம்பாள் சுதாரித்துக் கொண்டு "உங்களுக்கு இல்லாததா..." என்று உடனே தங்க தட்டை எடுத்து காந்தியிடம் கொடுத்தார். காந்தி அதை அங்கேயே ஏலம் விட்டு அதில் வந்த பணத்தை கட்சி நிதியில் சேர்த்தார். இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது யுத்த நிதியாக தான் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொடுத்தார் சுந்தராம்பாள்.


0 comments:

Post a Comment