அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்க்கும் தமிழ் இசை அமைப்பாளர்
16 மார்,2017 - 10:53 IST

தமிழில் வளர்ந்த வரும் இசை அமைப்பாளர் சாம் டி.ராஜ். வந்தா மல படத்தில் அறிமுகமான இவர், தற்போது சமுத்திரகனி நடிக்கும் ஏமாலி உள்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர் தற்போது சாலி கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளார். நெட்பிலிக்ஸ் என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோ நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட இருக்கிறார்.
இதுகுறித்து சான் டி.ராஜ் கூறியதாவது: இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத நெட்பிலிக்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கான் அவர்களின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோயுடன் இணைந்து செயல்பட உள்ளது. அமெரிக்காவில் படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலம் வழங்குவதில் இந்த நிறுவனமே முதல் இடத்தில உள்ளது. தற்போது அமெரிக்காவில் பிரபலமாகியுள்ள இந்த ட்ரெண்ட் 2018-க்குள் இந்திய தயாரிப்பு நிறுவங்களும் டிவி நிறுவனங்களும் பின்பற்றும். என்கிறார் சாம்.டி.ராஜ்.
0 comments:
Post a Comment