Tuesday, April 18, 2017

ரூ.1000 கோடியில் திரைப்படமாக தயாராகிறது மகாபாரதம்


ரூ.1000 கோடியில் திரைப்படமாக தயாராகிறது மகாபாரதம்



18 ஏப்,2017 - 10:30 IST






எழுத்தின் அளவு:








இந்தியாவின் பழம்பெரும் இதிகாசமான மகாபாரதம், பகவத்கீதை என்ற பெயரில் இந்துக்களின் புனித நூலாக இருக்கிறது. மகாபாரதத்தின் மூலக் கதையும், அதன் கிளை கதைகளும் பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. தற்போதும் சின்னத்திரையில் தொடர்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மகாபாரத கதையை திரைப்படமாக்கும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான பாகுபலியை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி அதன் இரண்டாம் பாகத்தையும் முடித்து விட்டார். இதன் பிறகு பாகுபலி தயாரிப்பாளர்களுடன் இணைந்து மகாபாரதத்தை எடுக்கும் எண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் அமீர்கானுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்துள்ளார்.

இந்த நிலையில் யு.ஏ.இ எக்ஸ்சேன்ஞ் மற்றும் என்.எம்.சி ஹெல்த்கேர் என்ற நிறுவனம் மகாபாரதத்தை ரூ.1000 கோடி செலவில் திரைப்படமாக தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனங்களின் தலைவர் ரகுராம் ஷெட்டி கூறியிருப்பதாவது:

இந்தியாவின் புராண இதிகாசமான மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க உள்ளோம். இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் இந்த புனித பணியில் இறங்கியிருக்கிறோம். இதன் பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கி மகாபாரதத்தின் முதல் பாகம் 2018-ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2020ம் ஆண்டிலும் வெளிவரும். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் தயாராகிறது. இந்த மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள் என்றார்.

இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் இயக்குகிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டார். பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதுகிறார். தயாராகும் மொழிகள் தவிர 100 மொழிகளில் டப் செய்யப்பட இருப்பதாகவும், உலகளவில் ரூ.300 கோடி மக்களை சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் தற்போது மோகன்லால் நடிப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கிருஷ்ணராகவும், கமல் தர்மராகவும், மோகன்லால் அர்ஜுனராகவும், ஆர்யா, மகேஷ்பாபு உள்ளிட்ட இளம் நடிகர்கள் பஞ்ச பாண்டவர்களில் ஒருவராகவும், அமிதாப்பச்சன் வஷிட்டராகவும், ரஜினி கர்ணனாகவும், வித்யா பாலன் பாஞ்சாலியாகவும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


0 comments:

Post a Comment