அனுஷ்காவின் தங்கை ஆகிறார் ரித்திகாசிங்!
02 ஏப்,2017 - 10:19 IST

நடிகையாக அறிமுகமான முதல் படத்திலேயே கதையின் நாயகியாக நடித்தவர் ரித்திகா சிங். ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான அவர் இறுதிச்சுற்று படத்திலும் அதே வேடத்தில் சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்திருந்தார். அதன்காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதன்பிறகு ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்த ரித்திகா சிங், தற்போது இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கான குரு, தமிழில் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கிறார் ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தைப்போலவே ஆக்சன் கதையில் அந்த படம் உருவாகிறது. மேலும், அதேபடத்தில் அனுஷ்காவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி அனுஷ்காவின் தங்கையாக ரித்திகா சிங் நடிக்கும் அந்த படத்தில் அனுஷ்கா-ரித்திகாசிங் இருவருக்குமே சமஅளவிலான முக்கியத்துவம் உள்ளதாம்.
0 comments:
Post a Comment