Sunday, April 2, 2017

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ரஜினி-கமல் வாக்களித்தனர்

Rajini Kamalசென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.


இதில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் இத்தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதாரவி, ராதிகா, குஷ்பூ உள்ளிட்டவர்கள் வாக்களித்தனர்.


இன்று மாலை 4 மணி வரை இத்தேர்தல் நடைபெறும்.


மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கமல்ஹாசன் ஏற்கெனவே விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளித்திருந்தார் இங்கே கவனிக்கத்தக்கது.


Rajini and Kamal casts his vote in Tamil Film Producer Council Election

0 comments:

Post a Comment