Sunday, April 2, 2017

ஜெமினி கணேசனாக சூர்யா நடிவில்லை


ஜெமினி கணேசனாக சூர்யா நடிவில்லை



02 ஏப்,2017 - 10:55 IST






எழுத்தின் அளவு:








பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படம் 'மகாநடி' என்ற பெயரில் உருவாக இருக்கிறது. ‛மகாநடி' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் முகக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை தெலுங்கு பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கயிருக்கிறார்.

சில திவங்களுக்கு முன் படத்தில் நடிகை சாவித்ரியின் கணவர் நடிகர் ஜெமினி கணேசனாக நடிக்க சில ஹீரோக்களிடம் பேசி வந்தனர். இதில் நடிகர் சூர்யா ஜெமினி கணேசனாக நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதைப்பற்றி விசாரித்தபோது, ' நடிகர் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க வைப்பது பற்றி சூர்யாவிடம் பேசியதாகவும் ஆனால், சில காரணங்களால் சூர்யா நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது படத்தில் நடிக்க வைப்பதற்கு வேறு நடிகரை படக்குழு தேடி வருவது கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment