'விஜய் 61' படத்தில் மூன்று கமெடியன்கள் ஏன்?
09 ஜூன், 2017 - 17:18 IST

தீபாவளி ரிலீஸை நோக்கி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது 'விஜய் 61' படக்குழு. மூன்று கெட்அப்களில் விஜய் நடித்து வரும் இந்தப்படத்தில் ஒவ்வொரு விஜய் கேரக்டருக்கும் ஒரு காமெடியன் என்ற வகையில் மூன்று காமெடியன்கள் நடித்து வருகின்றனர்.
மூன்று காமெடியன்களில் ஒருவராக வடிவேலு நடித்து வருகிறார். 'காவலன்' படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் வடிவேலு நடிக்கும் படம் இது. வடிவேலு தவிர, 'துப்பாக்கி' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சத்யனும், 'வேலாயுதம்' படத்தில் நடித்த யோகிபாபுவும் நடிக்கின்றனர்.
விஜய், சமந்தா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் யோகிபாபு நடிப்பதாக கூறப்படுகிறது. சமந்தாவோடு காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனனும் இப்படத்தின் நாயகிகளாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment