Friday, June 9, 2017

சத்ரியன் படத்துக்கு கிடைத்த பெருமை


சத்ரியன் படத்துக்கு கிடைத்த பெருமை



09 ஜூன், 2017 - 17:08 IST






எழுத்தின் அளவு:








'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள படம் - 'சத்ரியன்'. 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, அருள்தாஸ், விஜய் டி.வி. புகழ் காளையன் கவின், போஸ்டர் நந்தகோபால் என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சத்ரியன் படம் ஒரு ரௌடியின் கதையாக இருந்தாலும் வெட்டு குத்து ரத்தம் என வன்முறை இல்லாமல் குடும்பத்தினரோடு பார்க்கும் வகையில் சத்ரியன் படத்தை இயக்கியுள்ளாராம் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இன்று திரைக்கு வந்திருக்கும் சத்ரியன் படத்துக்கு போட்டியாக களமிறங்குவதாக சொல்லப்பட்ட மரகத நாணயம் படம் தியேட்டர் கிடைக்காததினால் பின்வாங்கிவிட்டது. சத்ரியன் உடன் வெளியாகியுள்ள ரங்கூன் படம் சுமார் 100 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ளது.

சத்ரியன் படமோ 300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இதன் மூலம், விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகும் படம் என்ற பெருமை சத்ரியனுக்குக் கிடைத்திருக்கிறது. கேரளா, கர்னாடகா மற்றும் வெளிநாடுகள் சேர்த்து உலகம் முழுக்க 500 க்கும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது சத்ரியன்.


0 comments:

Post a Comment