
ரஜினியின் கபாலி பட சூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, கிட்டதட்ட படத்தின் பாதி காட்சிகள் புகைப்படங்களாக வந்தன.
பின்னர் படக்குழு சுதாரிக் கொண்டு அறிக்கை வெளியிட்டது.
தற்போதும் சூட்டிங் நடக்கும் போதே, காலா படத்தின் பாடல், பன்ச் டயலாக், புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டும் ரஞ்சித் இயக்கும் படங்கள்.
ஆனால் இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் 2.0 சூட்டிங் சமயத்தில் பயங்கர கெடுபிடிகள் வைத்திருந்தார்.
ஆனால் தற்போது இவரது படத்தில் உள்ள காட்சிகளும் லீக் ஆகியுள்ளது.
எமி ஜாக்சன் கார் ஓட்டுவது போலவும் அந்த காரை ரஜினிகாந்த் தடுத்து நிறுத்துவது போன்ற புகைப்படங்கள் லீக்காகி இருக்கின்றன.
அந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதனால் சங்கடத்தில் இருக்கிறாராம் ஷங்கர்.
0 comments:
Post a Comment