ரஜினி படத்தில் பாடும் முதல்வரின் மனைவி.?
09 ஜூன், 2017 - 15:15 IST

கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி - ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. இதன்முற்கட்ட படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் நடந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பியிருக்கிறார். ரஜினி, மும்பையில் இருந்தபோது மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திரநாத் பட்னாவிஷின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார். இதுப்பற்றி அம்ருதா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ரஜினியை சந்தித்தேன், சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேசினோம் என்றார்.
இதற்கிடையே ரஜினியை, அம்ருதா சந்தித்தன் காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, அம்ருதா பாடுவது, நடனம் ஆடுவது போன்ற கலையில் மிகவும் ஆர்வம் மிக்கவர். சமீபத்தில் கூட அமிதாப் பச்சன் உடன் இணைந்து பிர் சே என்ற ஆல்பத்தில் ஆடி, பாடி, நடித்திருந்தார். ஆகையால் அம்ருதாவை, காலா படத்தில் ஒரு பாட்டு பாட வைக்க தான் இந்த சந்திப்பு நடந்தது என்றும், காலா படத்தின் மூலம் அம்ருதா தென்னிந்திய படத்தில் அதுவும் தமிழில் பாடகியாக அறிமுகமானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். அதேசமயம், இவர் பாடுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment