Friday, June 9, 2017

டி.இமானின் இசைக்கு பெரிய ரசிகன் நான் : ஏ.எல்.விஜய்


டி.இமானின் இசைக்கு பெரிய ரசிகன் நான் : ஏ.எல்.விஜய்



09 ஜூன், 2017 - 12:33 IST






எழுத்தின் அளவு:








தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் டி.இமான் குறிப்பிடத்தக்கவர். அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் ஹிட்டாகி வருவதால் முன்னணி இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களுக்கு இசையமைக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் தனது படங்களில் டி.இமானை இசையமைக்க வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக உள்ளதாம்.

அதுகுறித்து ஏ.எல்.விஜய் கூறுகையில், டி.இமானின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது இசைக்கு பெரிய ரசிகன் நான். அவர் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களின் பாடல்களை கேட்டதும், உடனே அவருக்கு போன் செய்து அந்த பாடல்களை என்னை கவர்ந்தது குறித்து சொல்வேன். இருப்பினும் இதுவரை அவருடன் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் நாங்கள் இணைந்து வேலை செய்வோம் என்று நம்புகிறேன் என்கிறார்.


0 comments:

Post a Comment