Friday, June 9, 2017

தயாரிப்பாளர்களுக்கு விஷால் திடீர் உத்தரவு


தயாரிப்பாளர்களுக்கு விஷால் திடீர் உத்தரவு



09 ஜூன், 2017 - 10:54 IST






எழுத்தின் அளவு:








படத்தின் வெளியீட்டு தேதியை, தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என, விஷால் உத்தரவிட்டுள்ளார். சிறு பட்ஜெட் படங்களை காப்பாற்றவும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாகி, நஷ்டம் அடைவதை தடுக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், புது உத்தரவு பிறப்பித்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதியை, முன்கூட்டியே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திரைப்பட வெளியீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு, நிரந்தர தீர்வு காண, முயற்சி எடுத்து வருகிறோம். 2018 ஜன., வரையில், வெளியீட்டுக்கு தயாராக உள்ள படங்களின் வெளியீட்டு தேதியை, சங்க அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என, கூறியுள்ளோம். முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, சின்ன பட்ஜெட் படங்கள் அதிகம் பாதிக்கிறது. இதனால், பட வெளியீடு தள்ளிப் போவதோடு, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. சின்ன பட்ஜெட் படங்களை காக்கவும், படங்களின் நஷ்டத்தை சரி செய்யவும், இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.


0 comments:

Post a Comment