காலா-வுக்கு தடை கோரி வழக்கு : ரஜினி, ரஞ்சித்திற்கு நோட்டீஸ்
09 ஜூன், 2017 - 10:52 IST

ரஜினி நடித்து வரும், காலா படத்தை தயாரிப்பதற்கு, தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, போரூரை சேர்ந்த, கே.ராஜசேகரன் தாக்கல் செய்த மனு: ரஜினி நடிக்கும், காலா என்ற கரிகாலன் படப்பிடிப்பு, மும்பையில் நடக்கிறது; படத்தை, ரஞ்சித் இயக்குகிறார். படத்தின் மூலக்கரு மற்றும் கதை குறித்து, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளேன். 1996ல், இயக்குனர் ரவிக்குமார் மூலம், கரிகாலன் மற்றும் உடன்பிறவாத தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன்.கரிகாலன் கதையின் கரு மற்றும் தலைப்பு அனைத்தும், என் படைப்பு. என் படைப்பை, நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மற்றொரு வடிவில், படமாக தயாரிக்கின்றனர். எனவே, கரிகாலன் என்ற தலைப்பையும், கதையையும் பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி தமிழரசி முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, ரஞ்சித், ரஜினி ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 15க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
0 comments:
Post a Comment