Wednesday, June 21, 2017

விஜய் பிறந்தநாளில் விஜய்சேதுபதி பட டிரைலர்


விஜய் பிறந்தநாளில் விஜய்சேதுபதி பட டிரைலர்



21 ஜூன், 2017 - 16:30 IST






எழுத்தின் அளவு:






Vikram-Vedha-trailer-on-vijays-birthday


ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங் போன்ற தோல்விப்படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்களது இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, விஜய்சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார்.
கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். 'விக்ரம் வேதா' படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன் முதலாக மாதவனும், விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்கும் இப்படத்தின் டிரைலர் நாளை அதாவது ஜூன்-22 அன்று வெளியாகவிருக்கிறது. ஜூன்-22 நடிகர் விஜய் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment