Wednesday, June 21, 2017

‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’. நாயகியாக சாயிஷா நடித்து இருக்கிறார். திங்பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.

வருகிற 23-ந் தேதி ‘வனமகன்’ திரைக்கு வருகிறது. இதையொட்டி ஜெயம் ரவி அளித்த பேட்டி…

“இந்த படத்தில் பணியாற்றிய போது, என்னை ஒரு குழந்தை போல கவனித்துக்கொண்டார்கள். என் அப்பாவுக்கு பிறகு இந்த படத்தை அதிக செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். விஜய் இந்த படத்துக்காக என்னை பிழிந்து எடுத்து விட்டார். படப்பிடிப்புக்காக மொத்த படக்குழுவும் காடுகளில் பல மணி நேரம் நடக்க வேண்டியது இருந்தது. மேக்கப் இல்லாமல் ஆதிவாசியாக அலைய விட்டார். மரம் விட்டு மரம் தாவவிட்டார். இந்த வலிகளை எல்லாம் தாங்கிக்கொண்டு நடித்தேன்.

இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். போட்ட காசை விட அனைவரும் அதிகம் எடுப்பார்கள். அப்படி இல்லையென்றால், நான் விஜய்க்காக மீண்டும் ஒரு படம் சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுப்பேன். நானும் அவருடன் சேர்ந்து தயாரிப்பேன். என் வண்டியும் ஓட வேண்டுமே.

திருட்டு வி.சி.டி., ஆன்லைன் மூலம் படம் வெளியிடப்படுவதால் தமிழ் பட தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அப்படி இதை செய்பவன் உண்மையாகவே தமிழனாக இருந்தால் இணையதளத்தில் வெளியிடாதே” என்றார் ஆவேசமாக.

இயக்குனர் விஜய், “ஜெயம்ரவி இல்லாமல் ‘வனமகன்’ இல்லை. அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு புது நாயகியாக சாயிஷா கிடைத்திருக்கிறார்.இந்த படத்தின் ஸ்டண்ட் வடிவமைப்பு முக்கிய இடம் பிடிக்கும்” என்று கூறினார்.

0 comments:

Post a Comment