Thursday, June 8, 2017

கபடி சேம்பியன் ஹீரோ ஆனார்


கபடி சேம்பியன் ஹீரோ ஆனார்



08 ஜூன், 2017 - 14:48 IST






எழுத்தின் அளவு:








திருநெல்வேலியை சேர்ந்த கபடி சேம்பியன் ராஜா. இவர் கபடியை மையமாக வைத்து உருவாகும் அருவா சண்ட என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இதனை சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்குகிறார். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சரண்யா, ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, பிளாக் பாண்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். தரண் இசை அமைக்கிறார், வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா தயாரிக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது:

தென்மாவட்டங்கள் தொடர்ந்து நடந்து வரும் ஆவணக் கொலை பின்னணியில் இந்த படம் உருவாகிறது. ஹீரோ கபடி விளையாட்டு வீரன் என்பதால் கபடி விளையாட்டும் உரிய முறையில் பதிவு செய்யப்படுகிறது. நம் மண்ணின் கலாச்சாரம், நம் மக்களின் கோபம், காதல் இவற்றை பதிவு செய்யும் பக்கா கமர்ஷியல் படமாக இது உருவாகிறது. புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. என்றார் ஆதிராஜன்.


0 comments:

Post a Comment