வில்லனுக்கு வில்லனாக இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் விஷால்..!
08 ஜூன், 2017 - 17:16 IST

நடிகர் சங்கம் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்கம் என ஒருபக்க விஷால் பிசியாக இருந்தாலும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதில் மலையாளத்தில் இவர் நடிக்கும் வில்லன் படத்தை இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன் இயக்குகிறார் என்பதும், அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் தெரிந்த செய்திதான். ஆனால் இதில் விஷாலுக்கு என்ன ரோல் என்கிற குழப்பம் மட்டும் நீடித்து வந்தது. இப்போது வரை அவர் இந்தப்படத்தில் வில்லனாகத்தான் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது.
க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் டாக்டராக நடிக்கும் விஷால், இந்தப்படத்தில் இருவித கெட்டப்புகளில் நடிக்கிறாராம்.. இந்தப்படம் பற்றி சமீபத்தில் பேசிய விஷால், “இது ஒரு அருமையான கதை, அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட ஒரு ரோலுக்காகத்தான் நான் காத்துக்கொண்டு இருந்தேன். அதனால் தான் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இந்த கதையை சொன்னதுமே எனக்கு பிடித்துவிட்டது. அதுமட்டுமல்ல மோகன்லால், இந்தப்படத்தில் நடிப்பதும் என்னையறியாமலேயே இந்தப்படத்திற்குள் நான் நுழைய காரணமாகிவிட்டது” என கூறியுள்ளார்.. இந்தப்படத்தில் ஹன்ஷிகா, மஞ்சு வாரியர், ராசி கன்னா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.
0 comments:
Post a Comment