Thursday, June 8, 2017

பசுபதி படத்துக்கு திடீர் விமோசனம்..!


பசுபதி படத்துக்கு திடீர் விமோசனம்..!



08 ஜூன், 2017 - 16:33 IST






எழுத்தின் அளவு:








கிட்டத்தட்ட படம் ரிலீஸாகாது அவ்வளவுதான் என்கிற நிலைக்கு போய்விட்ட்ட பசுபதியின் படம் ஒன்று திடீர் விமோசனம் பெற்று நாளை (ஜூன்-9) ரிலீஸாகிறது.. (இருந்தாலும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது) இது பசுபதி மலையாளத்தில் நடித்துள்ள படம். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்', ஊழம் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த புதிய படத்தின் பெயர் 'ம.சு.க'.. குழம்ப வேண்டாம்.. அது ஏதோ சீன மொழி பெயர் அல்ல. மலையாளத்தில் பசுபதி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படத்தின் பெயர் தான்.. அதாவது மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்பதன் சுருக்கம் தான் இந்த ம-சு-க.

இந்தப்படத்தில் பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். பசுபதிக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் ஜனனி ஐயர் பத்திரிகையாளராகவும், பசுபதி லாயராகவும், பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். ஒரு பேட்டிக்காக பிரதாப் போத்தனை சந்திக்க மூணாறு செல்லும் ஜனனி ஐயர், அங்கே பசுபதியை சந்திக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும்படி இருக்குமாம். இந்தப்படத்தை ஜெயன் வன்னேரி என்பவர் இயக்கியுள்ளார்.


0 comments:

Post a Comment