Saturday, June 10, 2017

குறும்படம் இயக்கும் வெங்கட்பிரபு


குறும்படம் இயக்கும் வெங்கட்பிரபு



10 ஜூன், 2017 - 15:23 IST






எழுத்தின் அளவு:








சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதனாலோ என்னவோ, அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாக படம் எடுப்பதையே தன்னுடைய பாணியாக்கிக் கொண்டார்.

சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 28- 2 ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு, மங்காத்தா மட்டுமே... அதுவும் அஜித் புண்ணியத்தில் இமாலாய வெற்றியைக் கொடுத்தது. மற்ற படங்கள் எல்லாம் சுமார் மற்றும் சொதப்பல் ரகம் தான்.

அதிலும் சமீபத்தில் தொடர் தோல்வியால் சோர்ந்திருந்தவருக்கு மீண்டும் ஒரு வெற்றி தேவைப்பட தனது முதல்படமான சென்னை 28, இரண்டாம் பாகமான சென்னை 28- 2 படத்தை தானே தயாரித்து இயக்கினார். ஆனால் இந்தப்படம் முதல்பாகம் அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது தனது உதவியாளரின் ஒரு படத்தை தயாரிக்கும் வெங்கட்பிரபு, ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது குறும்படம் இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. குறும்படம் எடுத்த பல இயக்குநர்கள் அடுத்த கட்டமாக தற்போது திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெங்கட்பிரபுவோ உல்டாவாக, திரைப்படங்களை இயக்கிவிட்டு குறும்படத்தை இயக்க உள்ளார்.


0 comments:

Post a Comment