அன்று காதலன், இப்போது நண்பன்
01 ஜூலை, 2017 - 15:04 IST

ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் நீண்டகாலமாக காதலித்து வந்தார்கள். இருவரும் திருமணம் எல்லாம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். இருந்தாலும் அவர்களது காதல் பிரிந்த சமயத்தில் ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடித்து வந்தனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலை நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஜகா ஜசூஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய கத்ரீனாவிடம், ரன்பீர் நல்ல நண்பரா அல்லது நல்ல தயாரிப்பாளரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அப்போது பேசிய கத்ரீனா... "தயாரிப்பாளராக ரன்பீர் நிறைய படங்கள் பண்ணவில்லை. இப்படம் முழுக்க அனுராக் காஷ்யாப்பின் மேற்பார்வையில் வந்தது. படத்தில் எங்களுக்குள் நடிப்பில் போட்டி இருந்தது. அதில் சில சந்தோஷங்களும் இருந்தன. ரன்பீர் நல்ல தயாரிப்பாளர் என்பதை விட அவர் எனக்கு நல்ல நண்பர்" என்றார்.
ஜகா ஜசூஸ் படம் ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment