மராத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜய் தேவ்கன்
15 ஜூலை, 2017 - 14:40 IST

நடிகர் அஜய் தேவ்கன் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் உள்ளார். பாலிவுட்டில் தான் நடிக்கும் படங்களை தயாரிக்கும் அஜய், தற்போது மராத்தி படம் ஒன்றை தயாரிக்கிறார். நானா பட்டேக்கர். சுமீத் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சதீஷ் ராஜ்வாடே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பமானது. அஜய்யின் மனைவி கஜோல் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனும், சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். அது எந்த மாதிரியான வேடம் என்று தெரியவில்லை. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment