Sunday, July 2, 2017

கொடிவீரன் படத்திற்காக தலையில் மொட்டை அடித்து நடிக்கிறார் பூர்ணா


கொடிவீரன் படத்திற்காக தலையில் மொட்டை அடித்து நடிக்கிறார் பூர்ணா



02 ஜூலை, 2017 - 10:43 IST






எழுத்தின் அளவு:






Poorma-to-appear-with-clean-shaved-head


கொம்பன் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வரும் படம் கொடிவீரன். வழக்கம்போல் கிராமத்து கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் நாயகியாக சாட்டை, குற்றம் 23 படங்களில் நடித்த மகிமா நம்பியார் நாயகியாக நடிக்க, ரேணிகுண்டா சனுஜா தங்கை வேடத்தில் நடிக்கிறார். காதல், செண்டி மென்ட், ஆக்சன் கலந்த கதையில் இந்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். சமீபகாலமாக கதாநாயகி என்கிற ட்ராக்கில் இருந்து விலகி முக்கியத்துவம் வாய்ந்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ள பூர்ணா, சவரக்கத்தி படத்தில் டைரக்டர் ராமின் மனைவியாக இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பவர், இந்த கொடிவீரன் படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறார். முக்கியமாக, இந்த படத்துக்காக ஒரு காட்சியில் நிஜமாலுமே அவருக்கு மொட்டை அடிக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு எந்த கதாநாயகிகளும் செய்யத்துணியாத வகையில், இந்த படத்திற்காக தனது தலைமுடியை தியாகம் செய்கிறார் பூர்ணா.

இதுகுறித்து அவரிடம் சொன்னபோது எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், கதைக்கு அவசியம் என்றால் அப்படி நடிப்பதில் தவறில்லை. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னாராம் பூர்ணா. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், கொடிவீரன் படத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்கிறார் பூர்ணா.


0 comments:

Post a Comment