Sunday, July 2, 2017

திட்டமிட்டப்படி நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் : அபிராமி ராமநாதன்


திட்டமிட்டப்படி நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் : அபிராமி ராமநாதன்



02 ஜூலை, 2017 - 14:10 IST






எழுத்தின் அளவு:






TN-film-chamber-announced-indefinite-strike


தியேட்டர்களில் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி..,யில் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரியும் ஜூலை 3 முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று தமிழக அரசையும் தமிழ் திரைப்பட வர்த்தக சபையினர் சந்தித்தனர். அப்போது தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று அபிராமி ராமநாதனின் வீட்டில் முக்கிய ஆலோசனை நடந்தது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து திட்டமிட்டபடி நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும். சினிமாத்துறை மீது மத்திய, மாநில அரசுகள் 58% வரியை விதித்துள்ளன;கோரிக்கை நிறைவேறும் வரை படக் காட்சிகள் ரத்து செய்யப்படும். ரூ.50-ரூ.200க்குள் சினிமா கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்;பிறமாநிலங்களில் உள்ளதைப்போல்,ஒரே வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். இரட்டை வரி விதிப்பை ஏற்று தியேட்டர் நடத்த முடியாது.

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஈடுசெய்யப்படும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தான் அரசு கேளிக்கை வரி தொடர்பான அரசாணையை வெளியிட்டது. நாங்கள் ஜிஎஸ்டி.,யை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. கேளிக்கை வரிக்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்துகிறோம். சினிமா துறையில் ஜிஎஸ்டி வரி-28%, கேளிக்கை வரி-30 % வசூலிக்கப்படுகிறது;58% வரி செலுத்தினால் நாங்கள் எப்படி திரையரங்கை நடத்த முடியும்.

தமிழகம் முழவதும் நாளை 1000 தியேட்டர்கள் மூடப்படும். நேற்றே சில பகுதிகளில் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment