பாவாடை, தாவணியில் சமந்தா
13 ஜூலை, 2017 - 10:53 IST

அழகான நடிகைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் ஆடைகள்தான். புடவை, மாடர்ன் டிரஸ்கள் ஆகியவற்றில்தான் இப்போதைய நாயகிகளை அதிகம் பார்க்க முடியும். தமிழ்நாட்டுக்கே உரிய ஆடையான பாவாடை, தாவணியை சினிமாவில் கூட இப்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. நம் இளம் பெண்களும் அந்த ஆடையை மறந்தே போய்விட்டார்கள். திருமணத்திற்கு அணியும் சிறப்பு ஆடைகளில் ஒன்றாக அது தற்போது மாறி வருகிறது.
நம் தமிழ் நடிகைகளை அந்த ஆடையில் பார்ப்பது அதிசயமாகவும் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் வரை தாவணி நாயகியாக த்ரிஷா வலம் வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சமந்தா பாவாடை, தாவணியில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தில்தான் சமந்தா திருநெல்வேலிப் பெண்ணாக நடிக்கிறாராம்.
அந்த பாவாடை, தாவணி புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு சமந்தா டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். பலரும் சமந்தாவின் அந்த இளமைத் தோற்றத்தை பாராட்டி வருகிறார்கள். 30 வயதிலும் பாவாடை, தாவணியில் ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால் சும்மாவா...?.
இதே சமந்தா தான் சமீபத்தில் ஒரு மெகஸினுக்கு கைதறி ஆடையை புரொமோட் செய்கிறேன் என கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment