Sunday, October 16, 2016

சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய படம்


201610161410230058_new-film-starring-sasikumar_secvpfஎம்.சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கிடாரி’. இதையடுத்து தன்னுடைய கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரித்து படத்தின் கதாநாயகனாக எம். சசிகுமார்நடிக்கிறார்.


இயக்குனர்கள் பாலா மற்றும் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பி. பிரகாஷ் இந்த படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


“அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் இந்த படம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படவுள்ளது”என்று இயக்குனர் தெரிவித்தார்.


இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ‘ஐவராட்டம்’, ‘உறுமீன்’ படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார்.


படத்தொகுப்பு-பிரவின் ஆண்டனி, கலை-மாயபாண்டி, தயாரிப்பு நிர்வாகம்-பி.அசோக்குமார், இணை தயாரிப்பு-பி.அசோக்குமார்.


இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகையர், இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.


0 comments:

Post a Comment