போதை கடத்தல் டானாக நடிக்கிறார் சாருஹாசன்
16 அக்,2016 - 14:10 IST

கமலஹாசன் அண்ணன் சாருஹாசனுக்கு 86 வயதாகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஒரு படத்தில் போதை பொருள் கடத்தும் டானாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஜீவா நடித்த ரவுத்ரம், மற்றும் களம் படங்களுக்கு இசை அமைத்த பிரகாஷ் நிக்கி தயாரிக்கிறார். விஜய் ஸ்ரீஜி என்பவர் இயக்குகிறார். ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் பிரகாஷ் நிக்கி கூறியதாவது: ரவுத்திரம், களம் படங்களுக்குப்பிறகு நிறைய படங்கள் இசையமைக்க சான்ஸ் வந்தது ஆனால் ஏனோ இன்னும் இன்னும் நல்ல கதை வேணும் என தேடலில் இருந்த போதுதான் விஜய் ஶ்ரீஜி சொன்ன கதை வேறொரு ட்ரெண்டில் இருந்தது. நானே இந்த படத்தை தயாரிக்கிறேன்னு ஏற்றுக்கொண்டேன். சாருஹாசன் பவுடர் உலகின் டானாக நடிக்கிறார். பொதுவாக நம்ம ஊரில் மட்டும் பவுடர் என்றால் முகத்துக்கு போடும் பவுடர் என நினைப்போம், இந்தியாவின் மற்ற நகரங்களில் பவுடர் என்றால் ட்ரக்கிங் என நினைப்பார்கள். மொத்தம் 12 கேரக்டர்களை உள்ளடக்கி கதையமைக்கப்பட்டுள்ளது. என்றார் பிரகாஷ் நிக்கி.
0 comments:
Post a Comment