Monday, October 17, 2016

சிறுத்தையுடன் சண்டைபோட டூப் பயன்படுத்தினாரா மம்முட்டி..?


சிறுத்தையுடன் சண்டைபோட டூப் பயன்படுத்தினாரா மம்முட்டி..?



17 அக்,2016 - 16:31 IST






எழுத்தின் அளவு:








சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'புலி முருகன்' படத்தில் மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் முதற்கொண்டு வெகுஜனங்கள் வரை பேசிக்கொள்கிறார்களாம். இந்த சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார் பீட்டர் ஹெய்ன்.. இந்த சமயத்தில்தான், சில தினங்களுக்கு முன்பு, பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி.சசி, தான் 30 வருடங்களுக்கு முன் இயக்கிய 'மிருகயா' படத்தில் மம்முட்டியும் சிறுத்தையும் மோதும் காட்சிகளை எந்தவித டெக்னாலஜி உதவியுமின்றி படமாக்கியதாக கூறியிருந்தார்..

மேலும் அந்த பேட்டியில், மம்முட்டி ஆரம்பத்தில் சிறுத்தையுடன் நடிக்க தயங்கியதாகவும் பின்னர் அவருக்கு தைரியம் கொடுத்து நடிக்கவைத்ததாகவும் கூறினார். அதேசமயம் இரண்டு லாங் ஷாட்டுகள் தவிர வேறெந்த காட்சியிலும் மம்முட்டிக்கு டூப் எதுவும் போடவில்லை என்றும் கூறினார்.. ஆனால் மம்முட்டியை பிடிக்காத சில குறும்பு ஆசாமிகள் என்ன செய்தார்கள் தெரியுமா..? சில மாதங்களுக்கு முன் ஒரு விழாவில் நடிகர் ஜெயராம் பேசும்போது, ஏதேச்சையாக 'மிருகயா' படத்தை பற்றியும் அந்தப்படத்தில் சிறுத்தையுடன் நடிக்க மறுத்து மம்முட்டி வெளியேற முயற்சித்ததையும் கூறியிருந்தார்..

இதை எப்படியோ சிலர் அறிந்து, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரவவிட்டு, மம்முட்டி சிறுத்தையுடன் நடிக்க பயந்து டூப் போட்டுத்தான் அந்தப்படத்தில் நடித்தார் என்பதுபோல ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள்.. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மம்முட்டி ரசிகர்கள் ஒருவேளை இது மோகன்லால் ரசிகர்களின் வேலையாகத்தான் இருக்கும் என குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார்கள்.


0 comments:

Post a Comment