விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார் அனு இமானுவல்
15 அக்,2016 - 16:05 IST

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் துப்பறிவாளன். இதில் பிரசன்னா, வினய் ஆகியோர் நடிக்கிறார்கள். அக்ஷரா ஹாசன்தான் ஹீரோயின். ஹீரோவுக்கு நிகரான கேரக்டர் அவருக்கு என்றாலும் விஷாலின் ஜோடியாக, காதலியாக உள்ள கேரக்டரில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகிக் கொள்ள அந்த கேரக்டருக்கு தற்போது மலையாள நடிகை அனு இமானுவல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அனு இமானுவல் பற்றிய சிறுகுறிப்பு: கேரளாவைச் சேர்ந்த அனு, பிறந்தது வளர்ந்தது, படித்தது அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில். பள்ளி விடுமுறையில் கேரளா வந்திருந்தபோது ஸ்வப்பன சஞ்சாரி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜெயராம், சவுமித்ராவின் மகளாக நடித்தார். அதன் பிறகு இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்து ஹிட்டான ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கில் மஞ்சு, ஆக்ஸிஜன், பிவேர் ஆப் தி கிட்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துப்பறிவாளன் மூலம் தமிழுக்கு வந்து விட்டார்.
0 comments:
Post a Comment