யானை தந்தம் பதுக்கல் – மீண்டும் சிக்கிய விஜய் பட நடிகர்
Published 1 min ago by CF Team Time last modified: October 16, 2016 at 7:04 am [IST]
மலையாள திரைப்பட ‘சூப்பர்ஸ்டார்’ மோகன்லால் வீட்டில் யானைத் தந்தம் பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
advertisement
2010 ஆம் ஆண்டு கொச்சி நகரில் நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் யானைத் தந்தங்கள் சிக்கின. இந்த வழக்கில் வனத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்றே மோகன்லால் வீட்டில் யானைத் தந்தங்கள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மோகன்லால் வீட்டில் யானைத் தந்தங்கள் முறைகேடாக வைக்கப்பட்டு உள்ளன; அவற்றை வைத்திருக்க தில்லுமுல்லு செய்து அனுமதி பெறப்பட்டு உள்ளது என சமீபத்தில் புதிதாக புகார் கூறப்பட்டு உள்ளது.
இதனையடுத்து மோகன்லால் வீட்டில் யானைத் தந்தங்கள் உள்ளனவா என உடனே கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மூவாற்றுபுழா நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.
Summary in English : A Vigilance Court today ordered ‘quick verification’ against Malayalam superstar Mohanlal and a former minister in the case relating to seizure of four elephant tusks from the actor’s residence in Kochi in 2012.
0 comments:
Post a Comment