கவலை படத்தில் டம்மி பீஸாக்கபட்ட அந்த நடிகர்
Published 1 min ago by CF Team Time last modified: October 16, 2016 at 8:27 am [IST]
மதுரை பான படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது வாங்கிய நடிகர் அவர். ஒரு தயாரிப்பாளர் அவரை வரிசையாக மூன்று படங்களுக்கு புக் செய்தார்.
advertisement
அதில் முதல் படமான பத்திரிகையாளர் படம் சரியாக போகவில்லை. இரண்டாவது படத்தில் உயிர் நடிகருடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. மூன்றாவது படத்தில் நடிக்க முடியாது என நடிகர் ஒதுங்கிவிட அந்த படத்தை கழுகு நடிகரை வைத்து எடுத்து வருகிறார் தயாரிப்பாளர்.
இதனாலேயே ரிலீஸாகவிருக்கும் கவலை படத்தின் புரமோஷன்களில் எல்லாம் தேசிய விருது நடிகரை காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டாராம் தயாரிப்பாளர். போஸ்டர் முதல் டீஸர் வரை எதிலுமே நடிகரின் முகத்தை காணோம். தயாரிப்பாளர் மீது செம கடுப்பில் இருக்கிறார் நடிகர்.
English summary : Producer of Kavali movie has sidelined national award winning actor.
0 comments:
Post a Comment