அனிருத்தின் பிறந்த நாள் பரிசு!
16 அக்,2016 - 08:22 IST

ரெமோ படத்திற்கு பிறகு அஜித்தின் 57வது படம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயன்-மோகன்ராஜா படம் என மூன்று மெகா படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இதில் அஜித்தின் புதிய படத்திற்கு வேதாளம் பாணியில் சமீபத்தில் ஒரு அதிரடியான பார்ஸ்ட் பீட் பாடலை ரெடி பண்ணிக்கொடுத்துள்ளார் அனிருத். இந்த பாடலிலும் ஆளுமா டோளுமா பாடல் ரேஞ்சுக்கு வரிந்து கட்டி நடனமாடுகிறாராம் அஜித். அப்பாடல் அப்படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில், ரெமோ படத்திற்காக அனிருத் கம்போஸ் செய்த, வேஷங்கள் பொய்யில்லை -என்ற பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை. ஏற்கனவே ஐந்து பாடல்கள் ஆல்பத்தில் இடம்பெற்றதால், அது படத்திற்கு தேவைப்படாது என்று எடுத்து வைத்து விட்டார்களாம். ஆனால் அந்த பாடலை வேறு படத்திற்கு பயன்படுத்த விரும்பாத அனிருத், இன்று தனது பிறந்த நாள் என்பதால், அந்த பாடலை இணையதளத்தில் ரெமோ ரசிகர்களுக்கு பரிசாக வழங்கப்போவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment