என்னோட எல்லா மேட்டரும் அவருக்கு தெரியும்? போட்டு உடைத்த சமந்தா
Published 1 min ago by CF Team Time last modified: October 17, 2016 at 7:58 am [IST]
சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலிப்பது, இப்ப்போது பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய இருப்பது என தினசரி சமந்தாவை பற்றிய அப்டேட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முக்கியமான விஷயம், அதாவது ரசிகர்கள் பலரின் மனதில் உறுத்தலாக உள்ள விஷயம் என்னவென்றால் சமந்தா-சித்தார்த்தின் காதல்.. சித்தார்த்துடனான காதல் நாகசைதன்யாவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன..? அப்படியெல்லாம் எங்களுக்குள் ஒன்றுமில்லை என அதை சமந்தா அவரிடம் மறைத்து விட்டாரா..?
advertisement
“ஏன் மறைக்கவேண்டும்.. நான் எதையும் மறைக்கவில்லை.. நாகசைதன்யாவுக்கு எல்லாம் தெரியும்.. சொல்லப்போனால் அந்த காலகட்டங்களில் எனக்கு உற்ற நண்பராக இருந்து ஆறுதல் சொன்னது நாகசைதன்யா தான். சில ஆண்டுகள் நட்பாக பழகிய பின்னர்தான் நானும் நாகசைதன்யாவும் காதலை பரிமாறிக்கொண்டோம்.. அதனால் சித்தார்த்தின் காதல் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது.. நாகசைதன்யாவுக்கும் இதுபோன்ற ஒரு காதல் முன்பு இருந்ததால் என் மனது அவருக்கு நன்றாகவே புரியும்” என்கிறாராம் சமந்தா..
Summary in English : Actress Samantha says that his lover Nagachaidhanya knows all about me including love with sidharth.
0 comments:
Post a Comment