பாலாவுக்காக காத்திருக்கும் சாட்டை யுவன்!
02 டிச,2016 - 08:36 IST

சாட்டை படத்தில் நடித்த யுவன் அதன்பிறகு கமரக்கட்டு, இளமி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு ஹிட்டாக அமையவில்லை. இந்த நிலையில்தான் அவருக்கு தற்போது பாலா இயக்கும் புதிய படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் யுவன்.
அவர் மேலும் கூறும்போது, பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தபோதும், அந்த வாய்ப்பு இத்தனை சீக்கிரத்தில் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னை அழைத்து நீதான் எனது அடுத்த படத்தின் ஹீரோ என்று சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. அவரிடத்தில் என்ன கதை , எந்த மாதிரி வேடம் என்றுகூட நான் கேட்கவில்லை. நீங்கள் எந்த மாதிரி கதையில், எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க சொன்னாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி கமிட்டாகி விட்டேன்.
அதேபோல் அவரும் இதுவரை படத்தின் கதை பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. என்னையும் அதற்காக கெட்டப்பை மாற்றவோ அல்லது ஏதேனும் பயிற்சிகள் எடுக்கவோ அவர் சொல்லவில்லை. தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வரும் நிலையில், விரைவில் அழைப்பேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அதனால் அவரது அழைப்புக்காக எந்த நேமும் தயாராக காத்திருக்கிறேன். அதோடு, பாலா சார் படங்களில் நடித்த விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வா என பல நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனை கிடைத்ததோ அதேபோன்று அவர் படம் மூலம் எனது சினிமா கேரியரிலும் பெரிய திருப்புமுனை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று செல்லும் யுவன், இளமி படத்தைப்பார்த்து விட்டு சில டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்ல வந்தனர். ஆனால் நான், கதை கேட்கவில்லை. பாலா சார் படத்தில் நடித்து முடித்த பிறகுதான் இனிமேல் கதை கேட்பேன் என்று அவர்களை திருப்பி அனுப்பி விட்டேன் என்கிறாார்.
0 comments:
Post a Comment