Tuesday, January 10, 2017

நடிகர் சூர்யா படப்பிடிப்பில் திடீர் தகராறு – சூட்டிங்கை நிறுத்திய பொதுமக்கள்



நடிகர் சூர்யா படப்பிடிப்பில் திடீர் தகராறு – சூட்டிங்கை நிறுத்திய பொதுமக்கள்








சூர்யா நடிப்பில் இம்மாதம் வெளியீட்டுக்கு ரெடியாகியுள்ள படம் சிங்கம்3. இப்படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கே.கே நகரில் உள்ள பாரதிதாசன் குடியிருப்பில் நேற்று தொடங்கியது.


முதல் நாளான நேற்றே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. ஏன் என்று விசாரிக்கையில், “பாரதிதாசன் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்ததாம், அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் அன்றாடம் மக்கள் உபயோகிக்கும் வழியை மறித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.


இதனால் கோபம் அடைந்த அந்த பகுதி மக்கள், படப்பிடிப்பை நிறுத்த சொல்லிட்டு தகராறு செய்தனர். வேறு வழியில்லாமல் பாதியிலே படப்பிடிப்பை நிறுத்தி அந்த இடத்தை காலிசெய்துள்ளது படக்குழு.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment