தயாரிப்பாளர் சங்க தேர்தல் : நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமனம்
10 ஜன,2017 - 15:13 IST

தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற பிப்., 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் களம் பலமுனை போட்டியை சந்திக்க இருக்கிறது. குறிப்பாக சிறுபட தயாரிப்பாளர்களின் பிரச்னை, திருட்டு விசிடி பிரச்னையை மையமாக வைத்து இந்த தேர்தல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நியாயமாக நடத்த கோரி பல்வேறு வழக்குகள் தொரடப்பட்டுள்ளன. குறிப்பாக முருகதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் இன்று ஒரு வழக்காக ஏற்று கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கேபி சுப்ரமணியம் நியமிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment