‛பைரவா' தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : கோர்ட் உத்தரவு
10 ஜன,2017 - 15:27 IST

பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவருடன் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமைய்யா, மைம் கோபி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். இப்படம் நாளை மறுதினம்(ஜன., 12-ம் தேதி) ரிலீஸாக உள்ள நிலையில் ரிலீஸ்க்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இந்நிலையில் பைரவா படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் எண்கள் எதுவும் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் பைரவா படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு, வழக்கை நாளை மறுதினத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Advertisement
0 comments:
Post a Comment