சத்தமில்லாமல் வளரும் கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்!
11 ஜன,2017 - 08:38 IST

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அவர் மலையாளத்தில் கோகினூர் என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் யுடர்ன் கன்னடம் மூலம் பிரபலமானவர். அதையடுத்து தமிழில் சரியான என்ட்ரிக்காக வெயிட் பண்ணிக்கொண்டி ருந்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான பிறகுதான் புதிய படங்கள் கமிட்டாகும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத் தில் மேலும் சில தமிழ்ப்படங்கள் அவருக்கு கிடைத்து பிசியாகி விட்டார்.
அந்த வகையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்தி நடித்துள்ள இவன் தந்திரன் படத்தில் நாயகியாக நடித்துள்ள ஸ்ரத்தா, நிவின் பாலி- நட்டி நடராஜன் இணைந்து நடித்துள்ள இவர்கள், மாதவன்-விஜயசேதுபதி நடித்து வரும் விக்ரம் வேதா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ஆக, ஒரே நேரத்தில் தமிழில் நான்கு படங்களில் நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், தமிழில் மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். தான் சந்திக்கும் டைரக்டர்களிடம், படத்துக்குப்படம் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லாமல், வெயிட்டான கேரக்டர்கள் கொடுத்தாலும் நடிப்பேன் என்று முன்மொழிந்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
0 comments:
Post a Comment