Tuesday, January 10, 2017

விக்ரம்வேதாவில் விஜயசேதுபதி வில்லனா?


விக்ரம்வேதாவில் விஜயசேதுபதி வில்லனா?



11 ஜன,2017 - 09:32 IST






எழுத்தின் அளவு:








ஓரம்போ, வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தற்போது இயக்கி வரும் படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன் விக்ரமாகவும், விஜய சேதுபதி வேதாவாகவும் நடிக்கிறார்கள். மேலும், வேட்டை படத்தை அடுத்து மாதவன் போலீசாக இந்த படத்தில் நடிக்கிறார். விஜயசேதுபதி தாதாவாக மாறு பட்ட கெட்டப்பில் நடிக்கிறார். இப்படி இவர்கள் எதிரும் புதிருமான வேடங்களில் நடிப்பதால், இந்த படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதுபற்றி அப்படக்குழுவை கேட்டபோது, விக்ரம் வேதா படம் புஷ்கர்-காயத்ரி இயக்கிய முந்தைய இரண்டு படங்களையும் போலவே மாறுபட்ட கதை யில் உருவாகிறது. இதில் விஜயசேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமின்றி மாதவனுடன் அவர் நடிக்கும் காம்பினேசன் காட்சிகளும் படமாகி விட்டன. பிப்ரவரி மாதம் முதல் மாதவன் நடிக்கும் தனிப்பட்ட காட்சிகள் படமாகிறது. மேலும், இதில் விஜயசேதுபதி தாதாவாக நடித்தபோதும், அவர் வில்லனாக நடிக்கவில்லை. முதலில் அப்படி தெரிந்தாலும் முடிவில் அவரது கேரக்டர் பாசிட்டீவாகவே இருக்கும். முக்கியமாக விஜயசேதுபதியின் ஹீரோ மார்க்கெட்டிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அவரது தாதா வேடம் இந்த படத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.


0 comments:

Post a Comment