Saturday, June 10, 2017

ஸ்ருதிஹாசனுக்கு தொடரும் தோல்வி


ஸ்ருதிஹாசனுக்கு தொடரும் தோல்வி



10 ஜூன், 2017 - 17:29 IST






எழுத்தின் அளவு:








தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் இந்த ஆண்டில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். அதிலும் மூன்று மொழிகளிலுமே அவர் தோல்வியைத் தழுவியிருப்பது தான் அதிர்ச்சியான தகவல்.

தமிழில் சூர்யா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த 'சி 3', தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து வெளிவந்த 'கட்டமராயுடு', ஹிந்தியில் நடித்து நேற்று வெளிவந்த ''பெஹன் ஹொகி தெரி' ஆகிய மூன்று படங்களுமே ஸ்ருதிஹாசனுக்குத் தோல்விப் படங்கள்.

அதிலும் நேற்று வெளியான 'பெஹன் ஹொகி தெரி' படத்தை விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஸ்ருதிஹாசன் தவறான தேர்வு என்றும், ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் போல அவர் நடித்திருக்கிறார் என்றும் முன்னணி ஹிந்தி பத்திரிகைகள் கூட ஸ்ருதிஹாசன் நடிப்பை விமர்சித்து எழுதியுள்ளன.

400 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ள நிலையில் அவர் கைவசம் அவருடைய அப்பா இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படம் மட்டுமே உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்றும் தெரியவில்லை. அப்படியே தொடங்கினாலும் இந்தப் படம் அடுத்த ஆண்டே வெளிவரும். ஸ்ருதிஹாசனைத் தேடி வேறு எந்த புதிய வாய்ப்புகளும் வராததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


0 comments:

Post a Comment