சுரேஷ் சங்கைய்யா படத்தில் மீண்டும் விதார்த்
01 ஜூலை, 2017 - 14:07 IST

காக்கா முட்டை மணிகண்டனிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் சங்கைய்யா. அவர் இயக்கிய முதல் படம் ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த் நாயகனாக நடித்த இந்த படத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நாயகியாக நடித்திருந்தார். கிராமத்து கதையில் உருவான இந்த படம் பல்வேறு உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. இந்த படத்தின் யதார்த்தமான கதை ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது.
அதனால் தனது அடுத்த படத்தையும் கிராமத்து கதையிலேயே இயக்குகிறார் சுரேஷ் சங்கைய்யா. ஒரு கிடாயின் கருணை மனு கதை கோயிலுக்கு நேந்து விட்ட கிடாவை மையப்படுத்தி உருவானது போன்று, புதிய படமும் கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகிறதாம். அதனால் தனது புதிய படத்திற்கு கடவுள் ஏன் கல்லானான் என்று பெயர் வைத்திருக்கும் அவர், தற்போது அப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டி ருக்கிறார்.
அடுத்த மாதம் முதல் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணி தொடங்குகிறதாம். மேலும், ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடித்த விதார்த்தே, சுரேஷ் சங்கைய்யாவின் அடுத்த படத்திலும் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment