ஸ்பைடர் படத்தின் தமிழ் டப்பிங் எடுபடுமா?
01 ஜூலை, 2017 - 15:50 IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். அதையும் படமாக்கி விட்டால் ஸ்பைடர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.
தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள 'ஸ்பைடர்' படத்தை நேரடி தமிழ்ப்படம் போல் மார்க்கெட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே 'ஸ்பைடர்' தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு மகேஷ் பாபுவையே டப்பிங் பேச வைக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டிருக்கிறார். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
த்ரில்லர் படமாக உருவாகி வரும் ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே புத்தகம் உட்பட சில சின்ன பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் மகேஷ்பாபு அக்மார்க் தெலுங்கு ஹீரோ. எனவே ஸ்பைடர் படத்தின் தமிழ் டப்பிங்கை தமிழ்நாட்டு மக்கள் எந்தளவுக்கு வரவேற்பார்கள் என்று தெரியவில்லை.
0 comments:
Post a Comment