பிக்பாஸில் என்ன ஆபாசம் இருக்கிறது - கமல் கேள்வி
12 ஜூலை, 2017 - 18:17 IST

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆபாசமாக உள்ளது, தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது, சமூகத்திற்கு கேடானது. ஆகவே, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல் கூறியிருப்பதாவது... "பிக்பாஸில் என்ன ஆபாசம் உள்ளது. இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. கிரிக்கெட் போட்டியின் போது கூட பேட்ஸ்மேன்கள் சிக்ஸ், போர் என்று அடிக்கும்போது சிறிய உடை அணிந்து சியர் கேர்ள்ஸ் ஆடுகிறார்கள். அப்படியானால் அவர்களையும் கைது செய்வீர்களா. தமிழ் ஆர்வலர்களிடத்தில் நான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளேன். நான் ஒரு கம்யூனிஸ்ட்வாதி என இந்துத்துவா அமைப்புகள் நினைக்கின்றனர். ஆனால், நான் ஒரு பகுத்தறிவாதி. சைவ சித்தாந்தத்தில், வேதங்கள் யோனிக்கு சமமானது என கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன சொல்வீர்கள். எந்த ஒரு புதிய முயற்சியையும் வரவேற்பவன் நான்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment