ஸ்பைடர் கிராபிக்ஸ் : 4 நாடுகளில் நடக்கிறது
12 ஜூலை, 2017 - 15:35 IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் ராகுல்பிரித் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படும் இந்த படத்திற்காக தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தனக்குத்தானே டப்பிங் பேசியிருக்கும் மகேஷ்பாபு. அதைத் தொடர்ந்து தனது புதிய படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஸ்பைடர் படத்தின் இறுதிகட்ட பணிகளில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார் முருகதாஸ். இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால், போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் இந்தியா மட்டுமின்றி, ரஷ்யா, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் பிசியாக நடந்து வருகிறது. அதனால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நான்கு நாடுகளுக்கும் மாறி மாறி விமானத்தில் பறந்து கொண்டேயிருக்கிறார். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள ஸ்பைடர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
0 comments:
Post a Comment