Saturday, October 15, 2016

மீண்டும் சந்தானம் ஜோடியாக வைபவி


மீண்டும் சந்தானம் ஜோடியாக வைபவி



15 அக்,2016 - 17:23 IST






எழுத்தின் அளவு:








சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தொடங்கி ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடியனாக நடித்தபோது அவரை தலையில் வைத்துக் கொண்டாடியது பட உலம். சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகைகளை அணுகினால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவருடன் நடிப்பதை தட்டிக் கழித்து விடுகிறார்களாம். அதனால்தான் ஏற்கனவே அவருடன் நடித்த நடிகைகளையே மீண்டும் ஜோடியாக்கி வருகின்றனர்.

சந்தானம் சோலோ கதாநாயகனாக அறிமுகமான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆஸ்னா சவேரி. அந்தப்படத்தைத் தொடர்ந்து 'இனிமே இப்படித்தான்' படத்திலும் கதாநாயகியாக சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களுமே சந்தானத்திற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது தான் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தைத் தொடர்ந்து விடிவி கணேஷ் தயாரிக்கும் புதிய படமொன்றில் நாயாகனாக நடிக்கிறார் சந்தானம். இப்படத்திலும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்த வைபவி ஷந்தில்யாவையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் சந்தானம்.


0 comments:

Post a Comment