சிரஞ்சீவி படத்தில் கேத்ரினை நீக்க சிரஞ்சீவியின் மகளா காரணம்?
15 அக்,2016 - 15:18 IST

சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தில் இடம்பெறும் குத்தாட்ட பாடலில் சிரஞ்சீவியுடன் நடனமாட நடிகை கேத்ரின் திரைஷா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசிநேரத்தில் கேத்ரின் நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த மாற்றத்திற்கு காரணம் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தான் என கூறப்படுகின்றது. கைதி நம்பர் 150 படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் சுஷ்மிதா குத்தாட்ட பாடலுக்கு வடிவமைத்த உடை தொடர்பாக, கேத்ரின் திரைஷாவிற்கும், சுஷ்மிதாவிற்கும் மனகசப்பு எழுந்துள்ளது. இதனால் சுஷ்மிதாவின் வற்புறுத்தலின் பேரில் கேத்ரின் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜூனின் நெருங்கிய தோழியான கேத்ரின் திரைஷா அல்லு அர்ஜூன் தான் கைதி நம்பர் 150 படத்தின் குத்தாட்ட பாடலுக்கு பரிந்துரை செய்தாராம்.
0 comments:
Post a Comment