Sunday, October 16, 2016

அஅஅ ஷுட்டிங்கில் தமன்னா


அஅஅ ஷுட்டிங்கில் தமன்னா



16 அக்,2016 - 09:57 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார் தமன்னா. இந்த ஆண்டில் அவர் நடித்து இதுவரை வெளிவந்த “தோழா, தர்மதுரை, தேவி” ஆகிய மூன்று படங்களுமே வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளன. மூன்று படத்திலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து மீண்டும் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'கத்தி சண்டை' டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளிக்கு வருவதாக இருந்த இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் வெற்றி காரணமாக தமன்னாவைத் தேடி பல புதுப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. சிம்பு ஜோடியாக முதல் முறையாக 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (அஅஅ)' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்தப் படம் மூன்று விதமான கால கட்டங்களில் நடைபெறும் ஒரு கதை. அதில் ஒரு கால கட்டத்தில் வரும் சிம்புவுக்கு ஜோடியாகத்தான் தமன்னா நடிக்கிறாராம். படத்தில் மற்றொரு நாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

அடுத்த ஆண்டில் தமன்னா நடித்துள்ள 'பாகுபலி 2' படமும் 'அஅஅ' படமும் வெளியாகும். அதற்குள் தமன்னா மேலும் நடிக்கும் புதிய தமிழ்ப் படங்களின் அறிவிப்புகளும் வெளியாகும். மும்பையிலிருந்து வந்த நடிகை என்றாலும் அறிமுகமான காலத்திலேயே தமிழில் பேசுவதற்கு பெரும் முயற்சி எடுத்து தற்போது சொந்தக் குரலில் டப்பிங் பேசும் அளவிற்கு வளர்ந்திருப்பவர் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே தமன்னாவை தாராளமாக பாராட்டலாம்.


0 comments:

Post a Comment