அதை என் ரசிகர்கள் தான் முடிவு பண்ணனும் – நான் இல்லை – நடிகர் விஜய் அதிரடி
Published 3 mins ago by CF Team Time last modified: October 17, 2016 at 10:19 am [IST]
பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நடிகர் விஜய் கண்டிப்பாக ஒரு நாள் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
advertisement
சில வருடங்களுக்கு முன்பு பல நடிகர்கள் தங்களுடைய ரசிகர் மன்றங்களை கலைத்து கொண்டிருந்த நேரத்தில். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை நன்கு அடையாளபடுத்தும் வகையில் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி அனைத்து ரசிகர் மன்றங்களும் வார்டு வாரியாக விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சில மாதங்களில் மேலும், ஒரு அதிரடியாக மக்கள் இயக்கதிற்க்காக “உழைத்திடு, உயர்ந்திடு” என்ற வரிகளை தாங்கிய அதிகாரபூர்வ கொடியை அறிமுகப்படுத்தி அரசியல் கட்சிகளை திக்குமுக்கடா வைத்தார் விஜய். இது விஜய் பெயரில் நற்பணி செய்து வந்த ரசிகர்களை ஊக்கப்படுத்தியது.
அங்குதான் ஆரம்பித்தது சிக்கல், சற்று உற்று நோக்கினால் விஜய் இந்த கொடியை வெளியிட்ட பிறகு அவரின் படங்கள் வெளியாகும் நேரத்தில் பிரச்சனைகள் எழுவதை உணரமுடியும். ஆனால், விஜய் மீது எறியப்படும் ஒவ்வொரு கல்லும் அவரின் வளர்ச்சிக்கு படிக்கல்லாகவே மாறி வருவதையும் கண் கூடாக பார்க்கிறோம்.
இந்நிலையில், விஜயின் நண்பரும் பிரபல நடிகருமான ஒருவர் எப்போது அரசியலுக்கு வரப்போகீர்கள் என்று கேட்டதற்கு “அது என் ரசிகர்கள் முடிவு பண்ண வேண்டிய விஷயம் நான் அல்ல” என்று சிரித்து கொண்டே விஜய் கூறியாக விஜய்-க்கு நெருங்கிய வட்டரங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால், விஜய்-ன் தந்தை எஸ்.ஏ.சி ஐம்பது வயதிற்கு மேல் அரசியலுக்கு வரலாம், தற்போது முழு கவனத்தையும் படத்தின் மீது செலுத்து என்று அறிவுரை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary in English : A Buzz in Kollywood that Actor Vijay’s Political entry.
0 comments:
Post a Comment