பிரபல நடிகரின் படத்தில் இருந்து விலகிய கயல் ஆனந்தி – படக்குழு முரணான பதில்
Published 1 hour ago by CF Team Time last modified: October 17, 2016 at 7:15 pm [IST]
இளவரசு என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம், 2எம்பி மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக, ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, ப்ரணீதா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
advertisement
சென்னை, ஊட்டி, மதுரை போன் ஊர்களில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. வருகிற டிசம்பரில் இப்படத்தை வெளியிட இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஆனந்தி. கால்ஷீட் பிரச்சினைக் காரணமாக படத்திலிருந்து ஆனந்தி விலகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனந்தி தரப்போ வேறு ஒரு காரணத்தை சொல்லி வருகின்றனர். அதாவது ஆனந்திக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டரை ஒதுக்கிவிட்டு, மற்ற நடிகைகளுக்கு வெயிட்டான கேரக்டர்களை கொடுத்ததை அறிந்ததால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஆனந்தி விலகினாராம். தற்போது ஆனந்திக்கு பதிலாக அதிதி என்ற புதுமுக நாயகியை நடிக்க வைத்து ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Summary in English : Actress Kayala aanandhi leaved from Adharva film. But, Kayal aandhi , film crew says different answer behind this.
0 comments:
Post a Comment