யு சான்றுடன் பைரவா ஜன.,12-ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
04 ஜன,2017 - 10:57 IST
இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, சதீஷ், தம்பி ராமய்யா, டேனியல் பாலாஜி நடித்துள்ள பைரவா படம் பொங்ல் திருநாளையொட்டி ஜனவரி 12அன்று வெளிவருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது...
பைரவா திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் பைரவா டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் “பைரவா டிரைலர்“ டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பைரவா டிரைலர் புத்தாண்டு விருந்தாகவும் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது. இது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த டிரைலர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து.
இளையதளபதி விஜயின் பைரவா திரைப்படத்தை சென்சார் குழுவினர் பார்த்து , பாராட்டி படத்துக்கு “யு“ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “யு “ சான்றிதழுடன் பைரவா பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12 தேதி திரைக்கு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment